/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு அறிவித்த சம்பள உயர்வு; 'டான்டீ' தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
அரசு அறிவித்த சம்பள உயர்வு; 'டான்டீ' தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு அறிவித்த சம்பள உயர்வு; 'டான்டீ' தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு அறிவித்த சம்பள உயர்வு; 'டான்டீ' தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 11, 2024 09:59 PM
கூடலுார்;மாநில அரசு அறிவித்த சம்பள உயர்வை வழங்க கோரி, கூடலுார் தேயிலை தோட்டங்களில் 'டான்டீ' தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரசுக்கு சொந்தமான அரசு தேயிலை தோட்டம் (டான்டீ) நிறுவனம் சார்பில், கூடலுார், கோத்தகிரி, குன்னுார் மற்றும் வால்பாறை பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 'தீபாவளிக்கு முன், நில அரசு 20 சதவீத போனஸ், மற்றும் 438 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும்,' என, அரசு அறிவித்தது. கடந்த மாதம் வரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.
இம்மாதமும், அதற்கான அறிவிப்பு இல்லாததால், அதிருப்தி அடைந்த, கூடலுாரியில் உள்ள டான்டீ தொழிலாளர்கள் நேற்று, காலை அந்தந்த டான்டீ சரகங்களில் ஆர்ப்பாட்டம் செய்து, எதிர்ப்பை தெரிவித்து பின் பணிக்கு சென்றனர். ' இந்த போராட்டம் தொடரும்,' என, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'அரசு அறிவித்த சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று (நேற்று), அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்,' என்றனர்.