/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எப்பநாடு வழித்தட பிரச்னை: மாற்று ஏற்பாடு போக்குவரத்து கழக பொது மேலாளர் தகவல்
/
எப்பநாடு வழித்தட பிரச்னை: மாற்று ஏற்பாடு போக்குவரத்து கழக பொது மேலாளர் தகவல்
எப்பநாடு வழித்தட பிரச்னை: மாற்று ஏற்பாடு போக்குவரத்து கழக பொது மேலாளர் தகவல்
எப்பநாடு வழித்தட பிரச்னை: மாற்று ஏற்பாடு போக்குவரத்து கழக பொது மேலாளர் தகவல்
ADDED : பிப் 29, 2024 11:33 PM
ஊட்டி;'எப்பநாடு வழித்தடம் பஸ் மாற்றப்படாது, கொர னுாருக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்,' என, பொது மேலாளர் கூறினார்.
ஊட்டி அருகே துானேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட எப்பநாடு கிராமத்தில், 500 குடும்பங்கள் உள்ளன. அருகில் ஒரு கி.மீ., தொலைவில் கொரனுார் காலனியில், 15 குடும்பங்கள், பிக்கப்பட்டிமந்து பகுதியில், 10 குடும்பங்கள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக ஊட்டியில் இருந்து எப்பநாடு கிராமம் வரை மட்டும் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், எப்பநாட்டில் இருந்து கொரனுார் செல்லும் போது மாலை நேரத்தில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால், கொரனுார் மற்றும் பிக்கப்பட்டிமந்து காலனி மக்கள் கொரனுார் வரை பஸ் இயக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று, கொரனுார் வரை பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், எப்பநாடு வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சை, கொரனுார் வரை இயக்க எப்பநாடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து எப்பநாடு கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர். இரவிலும் தொடர்ந்தது.
ரூரல் டி.எஸ்.பி., விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண்பதாக தெரிவித்தனர். நேற்று அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின், எப்பநாடு பஸ் வழக்கம் போல் இயக்கப்பட்டது.
பொதுமேலாளர் நடராஜ் கூறுகையில், ''எப்பநாடு கிராமத்திற்கு அதே வழித்தட பஸ் இயக்கப்படுகிறது. கொரனுார் காலனி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.

