/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் கண் சிகிச்சை முகாம்; 20 பேருக்கு அறுவை சிகிச்சை
/
பந்தலுாரில் கண் சிகிச்சை முகாம்; 20 பேருக்கு அறுவை சிகிச்சை
பந்தலுாரில் கண் சிகிச்சை முகாம்; 20 பேருக்கு அறுவை சிகிச்சை
பந்தலுாரில் கண் சிகிச்சை முகாம்; 20 பேருக்கு அறுவை சிகிச்சை
ADDED : ஜூன் 24, 2025 09:58 PM

பந்தலுார்; நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பந்தலுார் அனைத்து வியாபாரிகள் நல சங்கம், 'சில்ட்ரன் சாரிட்டபிள்' டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியவை இணைந்து, பந்தலுாரில் கண் சிகிச்சை இலவச முகாமை நடத்தின.
புனித சேவியர் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமை, சுற்றுச்சூழல் மைய நிர்வாகி சிவசுப்ரமணியம் துவக்கி வைத்தார். ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி முதல்நிலை டாக்டர் ஈம்மும், டாக்டர்கள் தேவேந்திரன், ரூபன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
அதில்,கண்புரை நோயினால் பாதிக்கப்பட்ட, 33- பேர் கண்டறியப்பட்டதுடன், 10 பேருக்கு கண் சதை வளர்ச்சி குறைபாடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. 20 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஏற்பாடுகளை, நவுசாத், ராஜா, மகேந்திர பூபதி, ஞானவேல், வியாபாரிகள் சங்க பொருளாளர் ஜெயராஜ், நிர்வாகி சந்திரலேகா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.