/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முன்னாள் டிரைவர் சங்க ஆலோசனை கூட்டம்
/
முன்னாள் டிரைவர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 24, 2025 09:51 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே கொளப்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.
தலைவர் மணி தலைமை வகித்து பேசுகையில், ''ஓட்டுனர்கள் பணி என்பது மிகவும் சிரமம் வாய்ந்தது. ஓட்டுநர்கள் தங்கள் குடும்ப சூழல் மற்றும் பணி சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்க வேண்டும்.
மேலும், சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் போதும், சுப காரியங்கள் மற்றும் இழப்புகள் ஏற்படும் போதும் முடிந்தவரை நேரடியாக சென்று உதவ வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, 'சங்க உறுப்பினர்கள் மருத்துவ செலவிற்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்குவது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது,' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆலோசகர் ராஜன் நன்றி கூறினார்.