/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனுமதி இல்லாமல் செயல்பட்ட விடுதிக்கு 'சீல்'
/
அனுமதி இல்லாமல் செயல்பட்ட விடுதிக்கு 'சீல்'
ADDED : ஜன 26, 2024 12:35 AM

கூடலுார்;மசினகுடி, மாவனல்லா பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதிக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
முதுமலை, மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் அனுமதி இன்றி விடுதிகள் நடத்துவதாக புகார் உள்ளது. இந்நிலையில், மசினகுடி அருகே, மாவனல்லா பகுதியில் அனுமதி இல்லாமல் தனியார் விடுதி செயல்படுவதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிராஜ், மசினகுடி எஸ்.ஜ., ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஹரிஷா, மசினகுடி ஊராட்சி செயலாளர் சோனி ஆகியோர் தனியார் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் முறையான அனுமதி இன்றி, விடுதி செயல்படுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் விடுதிக்கு 'சீல்' வைத்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'அரசின் முறையான அனுமதி இன்றி விடுதி செயல்படுவது தெரிய வந்தால் அந்த கட்டடத்துக்கு 'சீல்' வைக்கப்படும். மேலும், அதன் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

