/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏலத்தில் பேரூராட்சிக்கு ரூ.82 லட்சம் வருமானம் வளர்ச்சிப் பணிக்கு உதவும் என்பதால் மகிழ்ச்சி
/
ஏலத்தில் பேரூராட்சிக்கு ரூ.82 லட்சம் வருமானம் வளர்ச்சிப் பணிக்கு உதவும் என்பதால் மகிழ்ச்சி
ஏலத்தில் பேரூராட்சிக்கு ரூ.82 லட்சம் வருமானம் வளர்ச்சிப் பணிக்கு உதவும் என்பதால் மகிழ்ச்சி
ஏலத்தில் பேரூராட்சிக்கு ரூ.82 லட்சம் வருமானம் வளர்ச்சிப் பணிக்கு உதவும் என்பதால் மகிழ்ச்சி
ADDED : பிப் 06, 2024 12:01 AM
அன்னுார்;அன்னுார் பேரூராட்சி வணிக வளாகத்தில், 28 கடைகளுக்கு விடப்பட்ட ஏலத்தில், பேரூராட்சிக்கு 82 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
அன்னுார் பேரூராட்சி சார்பில், ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வார சந்தையில் மூன்று கொட்டகைகளும், வார சந்தை வளாகத்தில் 28 கடைகள், ஓதிமலை ரோட்டில் 28 கடைகள், என 56 கடைகள் கட்டி முடிக்கப்பட்டன.
கடைகளை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஏலம், நேற்று அன்னுார் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏலத்தில் 110 பேர் பங்கேற்றனர். முதற்கட்டமாக ஓதிமலை ரோட்டில் உள்ள 28 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடந்தது.
அதிகபட்சமாக 'ஏ' பிளாக்கில் ஒன்றாம் எண் கடை ஒன்று மாத வாடகை 36 ஆயிரத்து 890 ரூபாய்க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக மேல் தளத்தில் உள்ள ஒரு கடை 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ஏலம் எடுத்தவர்கள், அட்வான்ஸ் தொகையாக ஒரு கடைக்கு, ஒரு லட்சம் வீதம், 28 லட்சம் ரூபாய் செலுத்தினர். கடைகள் ஏலம் எடுத்தவர்கள் 12 மாத வாடகையை செலுத்த வேண்டும் என பேரூராட்சி அறிவித்ததால், 53 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் தொகை பேரூராட்சிக்கு வருமானமாக கிடைத்துள்ளது.
அட்வான்ஸ் மற்றும் ஒரு வருட வாடகை என 82 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இன்னும் 28 கடைகள் உள்ளன. அந்த கடைகளையும் ஏலம் விடும்போது, ஒன்றரை கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பேரூராட்சியில் சாலை, குடிநீர், கழிவுநீர் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்ய முடியும்.
எந்த புகாரும் இல்லாதபடி பொது ஏலத்தில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. விரைவில் மேட்டுப்பாளையம் சாலை கடைகள், பஸ் ஸ்டாண்டில் பஸ்களுக்கு சுங்கம் வசூலிப்பது, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட பிற இனங்களுக்கும் ஏலம் நடத்தப்படும்' என்றனர்.