/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னூரில் தொடரும் மழை: ரயில் பாதையில் விழுந்த மரங்கள்
/
குன்னூரில் தொடரும் மழை: ரயில் பாதையில் விழுந்த மரங்கள்
குன்னூரில் தொடரும் மழை: ரயில் பாதையில் விழுந்த மரங்கள்
குன்னூரில் தொடரும் மழை: ரயில் பாதையில் விழுந்த மரங்கள்
ADDED : ஜன 10, 2024 01:12 AM

குன்னுார்:குன்னுார் மலை ரயில் பாதையில், முட்புதர்களுடன் மரங்கள் விழுந்ததால் மலை ரயில்கள் தாமதமானது.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் கன மழை பெய்து வருகிறது. அதில், குன்னுார் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரன்னிமேடு அருகே, 21வது கி.மீ., பகுதியில் முட்புதர்களுடன் இரு மரங்கள் விழுந்தன.
இதேபோல, ஊட்டி -குன்னுார் இடையே, 28.6வது கி.மீ., பகுதியில் தண்டவாளத்தில் மரம் விழுந்தது. தகவலின் பெயரில் ரயில்வே ஊழியர்கள், 20 பேர் இரு குழுக்களாக பிரிந்து சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர்.
இதனால், காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில், ஹில்குரோவ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது.
சீரமைப்பு பணி நிறைவு பெற்ற பிறகு, ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை, 11:40 மணிக்கு குன்னுார் வந்து சேர்ந்தது. பின், ஒரு பெட்டி கூடுதலாக இணைத்து ஊட்டிக்கு சென்றது. இதே போல குன்னூரில் இருந்து காலை, 7:45 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில், 20 நிமிடங்கள் தாமதமானது. சுற்றுலா பயணிகள் கடுங்குளிரில் சிரமப்பட்டனர்.

