/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'விண்வெளியில் உலகுக்கே வழிகாட்டி இந்தியா'
/
'விண்வெளியில் உலகுக்கே வழிகாட்டி இந்தியா'
ADDED : ஜன 26, 2024 11:10 PM

மேட்டுப்பாளையம்: ''விண்வெளியில் உலகுக்கே வழிகாட்டி இந்தியா,'' என, மத்திய இணையமைச்சர் முருகன் பெருமிதம் தெரிவித்தார்.
காரமடை ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மத்திய இணையமைச்சர் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அவர் பேசியதாவது:
நம் நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. 10 ஆண்டுகளில் நாம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளோம்.
உலகளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முதலிடத்தில் உள்ளோம். விண்வெளியில் உலகுக்கே வழிகாட்டி இந்தியா. இளைஞர்களை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
பா.ஜ., ஆட்சியில், விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கேலோ இந்தியா போட்டிகளால், விளையாட்டு வீரர்கள் ஊக்கம் அடைந்துள்ளனர். அடுத்த 25 ஆண்டுகள் புதிய இந்தியாவை, இளைஞர்கள் தான் வழிநடத்தப் போகின்றனர். அனைவரும் இணைந்து இந்தியாவை வல்லரசாக்க முயற்சி செய்வோம்.
இந்த குடியரசு தினத்தில், அதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். இவ்வாறு, அவர் பேசினார்.
பள்ளி தாளாளர் சோமசுந்தரம், முதல்வர் ஷர்லின், அறங்காவலர் விஸ்வநாத், நிர்வாக தலைவர் நிர்மலா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

