/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கார்குடி பழங்குடியினர் பள்ளி கலை நிகழ்ச்சியில் அசத்தல்
/
கார்குடி பழங்குடியினர் பள்ளி கலை நிகழ்ச்சியில் அசத்தல்
கார்குடி பழங்குடியினர் பள்ளி கலை நிகழ்ச்சியில் அசத்தல்
கார்குடி பழங்குடியினர் பள்ளி கலை நிகழ்ச்சியில் அசத்தல்
ADDED : பிப் 12, 2024 01:22 AM

கூடலுார்;முதுமலை கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி ஆண்டு விழாவில், கலை நிகழ்ச்சிகளில் பழங்குடி மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.
முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி வரவேற்றார். பழங்குடியினர் நலம் தனி தாசில்தார் நடேசன் தலைமை வகித்து பேசினார்.
பள்ளி ஆசிரியர்கள் கவியரசி, ரம்யா ஆண்டு அறிக்கைகள் வாசித்தனர். தொடர்ந்து விளையாட்டு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பழங்குடி மாணவர்களின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. பழங்குடியினர் சார்பில், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் முதுமலை ஊராட்சி தலைவர் கோமதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் சுரேஷ், கலா, கிராம கல்வி குழு தலைவர் கேத்தன், வனச்சரகர்கள் விஜய், பாரத், மனோஜ்குமார், மேகலா, உட்பட பலர் பங்கேற்றனர். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

