/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு கொலை வழக்கு பிப்.1ம் தேதி விசாரணை?
/
கோடநாடு கொலை வழக்கு பிப்.1ம் தேதி விசாரணை?
ADDED : ஜன 25, 2024 10:08 PM
கோவை:நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில், 2017ம் ஆண்டு ஏப். 23ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.யின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், உட்பட, 11 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் அடுத்தடுத்து நடந்த மர்ம மரணங்கள் குறித்து, 36 பேர் அடங்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் குழு விசாரித்து வருகிறது.இதுகுறித்து, இடைக்கால விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த அவர், 11ம் தேதி ஆஜராக வேண்டுமென, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். ஒரு சில காரணங்களால் அவரால் ஆஜராக இயலவில்லை.
அவரை மீண்டும் வரும் பிப்., 1ம் தேதி ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

