/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குங்பூ தற்காப்பு பயிற்சி; பள்ளி மாணவியர் அசத்தல்
/
குங்பூ தற்காப்பு பயிற்சி; பள்ளி மாணவியர் அசத்தல்
ADDED : மார் 01, 2024 12:00 AM
பந்தலுார்:பந்தலுாரில், குங்பூ, சிலம்பம், யோகா பயிற்சிகள், 25 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு பயிற்சிகளை நிறைவு செய்த, 65 மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, முதன்மை பயிற்சியாளர் ரகுராம் தலைமை வகித்தார். பயிற்சியாளர் குமார் முன்னிலை வகித்தார்.
எட்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில், 10 வகுப்பு படிக்கும் மாணவி, ராகவர்ஷினி , 6- ம் வகுப்பு மாணவி பிரக்திஷா ஆகியோருக்கு 'பிளாக் பெல்ட்' வழங்கப்பட்டது.
63 மாணவ, மாணவிகளுக்கு, பிற வண்ண பெல்ட்டுகள் வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, எல்.பி.எப். தொழிற்சங்க தலைவர் மாடசாமி, வியாபாரிகள் சங்கத் தலைவர் அஷ்ரப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பயிற்சியாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

