/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொலைந்து போய் மீட்கப்பட்ட மொபைல் போன்கள்; ஊட்டியில் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ADDED : ஜூன் 23, 2025 10:36 PM

ஊட்டி; ஊட்டியில் தொலைந்து போய் மீட்கப்பட்ட, 128 போன்களை உரிய நபர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
ஊட்டியில் சிறுவர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., நிஷா தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் முன்னிலையில் மீட்கப்பட்ட, 128 மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன
எஸ்.பி.,நிஷா நிருபர்களிடம் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில், சில நபர்களால் வழிப்பறி செய்யப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் தொலைந்து போன போன்கள் குறித்து போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், போலீசார் போன்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதில், தொலைந்து போன அல்லது பறித்து செல்லப்பட்ட மொபைல் போனை மற்றொருவர் பயன்படுத்தும்போது, அதில் உள்ள 'ஐ.எம்.இ.ஐ.' எண் போலீசாருக்கு கிடைக்கும்.
இதன் அடிப்படையில் ஊட்டியில், 128 மொபைல் போன்களும் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பொது இடங்களில் மக்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்புடன் வைப்பதுடன் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என்றார்.
மொபைல் போன்களை பெற்றவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.