/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பனிமூட்டத்துடன் சாரல் மழை: குளிரில் தவிக்கும் மலை மக்கள்
/
பனிமூட்டத்துடன் சாரல் மழை: குளிரில் தவிக்கும் மலை மக்கள்
பனிமூட்டத்துடன் சாரல் மழை: குளிரில் தவிக்கும் மலை மக்கள்
பனிமூட்டத்துடன் சாரல் மழை: குளிரில் தவிக்கும் மலை மக்கள்
ADDED : ஜன 08, 2024 10:50 PM

குன்னுார்;குன்னுாரில் பனிமூட்டத்துடன் மழையும் பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குன்னுாரில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதேபோல, தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது.
நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி குன்னுார் ரூரல் பகுதியில், 12 மி.மீ., மழையளவு பதிவானது.
கடுங்குளிர் வாட்டுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெலிங்டன் பகுதியில் இருந்து குன்னுார் பர்லியார் வரையிலான பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், மித வேகத்தில் முன்னெச்சரிக்கையுடன் முகப்பு விளக்குகள் ஒளிரவிட்டு இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் இல்லாததால், தேயிலை செடிகளில் கொப்பளநோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் டால்பின் நோஸ், லாம்ஸ்ராக் போன்ற சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக டிச., ஜன., மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பனிமூட்டத்துடன் மழையும் நீடிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. குறிப்பிட்ட சில இடங்களில் பனிமூட்டத்தின் அடர்த்தி அதிகரித்துள்ளது,' என்றனர்.

