/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
என்.சி.சி., மாணவர்களுக்கு 'ஏ' சான்றிதழ் தேர்வு
/
என்.சி.சி., மாணவர்களுக்கு 'ஏ' சான்றிதழ் தேர்வு
ADDED : பிப் 05, 2024 11:55 PM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி., மாணவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் தேர்வு நடந்தது.
தேர்வில், தம்பு மேல்நிலைப்பள்ளி, சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி, ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, மகாஜன மேல்நிலைப்பள்ளி, மெட்ரோ மெட்ரிக் பள்ளி, பண்ணாரி அம்மன் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, 200 என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வை, 2 டி.என்., சி.டி.சி., என்.சி.சி., கமாண்டிங் ஆபீசர் இம்மானுவேல் தமாங் தலைமை வகித்து நடத்தினார்.
தம்பு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். எழுத்து தேர்வு, அணி நடை, ராணுவ வரைபடத்தை பயன்படுத்தி கற்றல், ஆயுதப் பயிற்சி உள்ளிட்டவை நடந்தன. துாய்மை இந்தியா திட்டத்தில் என்.சி.சி., மாணவர்கள், கோவை -- மேட்டுப்பாளையம் ரோட்டின் ஓரத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினர்.
துாய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு அட்டைகளை கைகளில் ஏந்தி பிரசாரங்களை மேற்கொண்டனர். தேர்வு ஏற்பாடுகளை, என்.சி.சி., அலுவலர்கள் குணசேகரன், கார்த்திகேயன், சின்னப்பராஜ், தேவதாஸ், சோபன், கீதாஞ்சலி ஆகியோர் செய்திருந்தனர்.