/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் விபத்து ;படு காயத்தால் ஒருவர் மரணம்
/
மலை பாதையில் விபத்து ;படு காயத்தால் ஒருவர் மரணம்
ADDED : ஜன 16, 2024 11:21 PM
ஊட்டி;ஊட்டி அருகே, இத்தலார் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பரான மகாலிங்கம், 54, ஆகியோருடன் மசினகுடி அருகே பொக்காபுரம் கோவிலுக்கு காரில் சென்றார்.
காரை இத்தலார் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் ஓட்டினார். கல்லட்டி மலைபாதையில் சென்ற போது, இடையில் இயற்கை காட்சியை ரசிக்க வாகனத்தை நிறுத்தி, நந்தகுமாரின் குடும்பத்தினர் கீழே இறங்கினர்.
பின், காரை ஓரமாக நிறுத்த முயற்சி செய்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அதில், மகாலிங்கம், நந்தகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலின் பேரில் புதுமந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று இருவரையும் மீட்டு, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், மகாலிங்கம் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

