/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலம் தொடர்பான ஆவணங்கள் பெறுவதற்கு இணைய வழி சேவை
/
நிலம் தொடர்பான ஆவணங்கள் பெறுவதற்கு இணைய வழி சேவை
ADDED : ஜன 09, 2024 08:59 PM
ஊட்டி:நீலகிரியில் நிலம் தொடர்பான தேவைகளுக்கு, இணைய வழி சேவை கொண்டுவரப்பட்டுள்ளது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளின் மூலம், பொது மக்களுக்கு நிலம் தொடர்பான பல்வேறு தேவைகளுக்கு, அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே இணைய வழியில் பட்டா மாறுதல் உத்தரவுகள் பெற அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நத்தம் நில ஆவணங்கள் இணைய வழி சேவைக்கு கொண்டு வரும் திட்டத்தில், மூன்றாவது கட்டத்தில், நீலகிரியில் கூடலுார் வட்டத்திற்கு உட்பட்ட, ஐந்து வருவாய் கிராமங்களின் நத்தம் ஆவணங்கள் (துாய அடங்கல் மற்றும் சிட்டா) கடந்த, டிச., 26ல் இணைய வழி சேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் நத்தம் இனங்களில் பட்டா மாறுதல் செய்யவும் அல்லது உட்பிரிவு செய்யவும் சம்பந்தப்பட்ட மனுக்களை, பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் இணையவழி சேவை மூலம், https://service.tn.gov.in என்ற இணயவழி முகவரியில் நத்தம்- பதிவேடு, சிட்டா மற்றும் புல வரைபடங்கள் போன்ற நில ஆவணங்களை பதிவிறக்கம் செய்து பயன் அடையலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

