/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
/
ஊட்டி காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஊட்டி காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஊட்டி காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ADDED : ஜன 27, 2024 03:16 AM
ஊட்டி: ஊட்டியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் விதமாக, காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றி பாராட்டும் விதமாக, தலைவர்கள் மற்றும் வீரர்களுக்கு, சிலைகள், நினைவு இல்லங்கள், நினைவு துாண்கள் மற்றும் நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டு அரசின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அந்த பெருமக்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில், தலைவர்களின் தியாகங்கள் மற்றும் பெருமைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், அரசு சார்பில் விழாக்களும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் மாவட்ட தலை நகரங்களில் மரியாதை செலுத்தப்படுகிறது.
அதன்படி, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு, நேற்று கலெக்டர் அருணா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், ஊட்டி ராஜாஜி வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசப்பற்று பாடல்கள் பாடினர்.
அதில், டி.ஆர்.ஓ., மகராஜ், தாசில்தார் சரவணகுமார், மாவட்ட மத நல்லிணக்க ஒருமைப்பாடு அனுமதி குழு தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

