/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துணை தொழில் தேர்வு கட்டணம் செலுத்த வாய்ப்பு
/
துணை தொழில் தேர்வு கட்டணம் செலுத்த வாய்ப்பு
ADDED : பிப் 05, 2024 09:41 PM
ஊட்டி:அகில இந்திய துணை தொழில் தேர்வு குறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், 2017---19ல் இரண்டு ஆண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும், தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு, இந்தி துணை தொழில் தேர்வு (செமஸ்டர் சிஸ்டம் மட்டும்) மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, துணை தேர்வு தொடர்பாக, முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை வரும், 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதல் படி செலுத்தி, வைப்பினை பயன்படுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம்.
துணை தேர்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற, https://ncvtmis.gov.in என்ற இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.