/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதி; விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலம்
/
குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதி; விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலம்
குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதி; விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலம்
குடிநீர் தட்டுப்பாடால் மக்கள் அவதி; விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலம்
ADDED : ஜூன் 10, 2025 08:41 PM
ஊட்டி:
'ஊட்டி நகராட்சி வார்டு பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன 1.30 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். வார்டு பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக பார்லிமந்து, ஓல்டு ஊட்டி, பார்சன்ஸ் வேலி உள்ளிட்ட எட்டுக்கு மேற்பட்ட தடுப்பணைகளில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. கடந்த மாதம் சில நாட்கள் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டது. அதன்பின் பெரும்பாலான வார்டுகளுக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சில வார்டுகளுக்கு பல நாட்கள் குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வார்டு மக்கள் விலை கொடுத்து லாரிகளில் தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் சென்றதை அடுத்து சில வார்டுகளுக்கு லாரி மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதில், சில வார்டுகள் மேடான பகுதியில் உள்ளன. அங்கு லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் போது லாரிகளிலிருந்து குடங்களில் குடிநீரைப் பிடித்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் பிரச்னை உள்ள வார்டுகளில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.