/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நில உரிமை சான்று வேண்டும்: பதிவு துறை தலைவருக்கு மனு
/
நில உரிமை சான்று வேண்டும்: பதிவு துறை தலைவருக்கு மனு
நில உரிமை சான்று வேண்டும்: பதிவு துறை தலைவருக்கு மனு
நில உரிமை சான்று வேண்டும்: பதிவு துறை தலைவருக்கு மனு
ADDED : பிப் 01, 2024 10:58 PM
குன்னுார்;'நீலகிரி மாவட்டத்தில் நில உரிமை சான்று வழங்க வேணடும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
அருவங்காடு பகுதியை சேர்ந்த சஜீவன் சென்னை பதிவு துறை தலைவருக்கு அனுப்பிய மனு :
நீலகிரி மாவட்டத்தில் படுக மக்கள் தங்களின் மூதாதையரின் பெயரில் உள்ள நிலங்களை நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றனர்.
இதுவரை மக்கள் தங்களின் குழந்தைகளின் படிப்பிற்காகவும், மருத்துவ செலவிற்காகவும் நிலங்களை விற்பனை செய்ய ஆர்.டி.ஓ. இடமிருந்து நில உரிமை சான்று பெற்று விற்பனை செய்து வந்தனர்.
கடந்த செப். மாதம் முதல், நில உரிமை சான்று வழங்குவதை நிறுத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் நிலம் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 90 ஆயிரம் மலைவாழ் மக்கள் சமவெளி பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்கு உள்ள தடையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நில உரிமை சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சஜீவன் கூறியுள்ளார்.

