/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழநிக்கு புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர்
/
பழநிக்கு புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர்
ADDED : ஜன 27, 2024 03:15 AM

பந்தலுார்: பந்தலுாரில் இருந்து, 80 பேர் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
பந்தலுார் சுற்றுப்புற மக்கள், தைப்பூச திருவிழா வாரத்தின் போது ஆண்டுதோறும் பாதயாத்திரை சென்று வருகின்றனர். 'மயில்வாகனம் பழநி பாதயாத்திரை குழு,' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவினர், மாலை அணிந்து விரதம் இருந்து, பந்தலுாரில் இருந்து கோவை வரை அரசு பஸ்சில் செல்கின்றனர்.
கோவையிலிருந்து ஈச்சனாரி விநாயகர் கோவில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கெடிமேடு, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், சண்முக நதி வழியாக பழநிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இந்து குழுவில், 80 பேர் மாலை அணிந்து நேற்று காலை முருகன் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், ஒருங்கிணைப்பாளர் சாமி வேல் தலைமையில் புறப்பட்டனர். இவர்களை ஊர் மக்கள் வழி அனுப்பி வைத்தனர்.

