/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் போலீசார் வாகன சோதனை தீவிரம்
/
எல்லையில் போலீசார் வாகன சோதனை தீவிரம்
ADDED : ஜன 26, 2024 12:32 AM

கூடலுார்:கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நாட்டின் குடியரசு தின விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மாநில எல்லைகளில், தமிழக போலீசார் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம், முதுமலை கக்கனல்லா சோதனை சாவடி, தமிழக கேரளா எல்லையான நாடுகாணி, சோலையடி, தாளூர், பாட்டவயல் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனைக்கு பின் அனுமதித்து வருகின்றனர்.
அதில், தமிழக- கர்நாடக எல்லையான, முதுமலை கக்கனல்லா சோதனை சாவடியில், கூடுதலாக எஸ்.ஐ., உட்பட ஐந்து போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகன சோதனையை தீவிர படுத்தி உள்ளனர். இப்பணிகளை, கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
போலீசார் கூறுகையில்,'குடியரசு தின விழா அமைதியாக கொண்டாடும் வகையில், நீலகிரியை ஒட்டிய வெளி மாநில எல்லைகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தி உள்ளோம். மேலும், அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்,' என்றனர்.

