/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயில் பணிமனையில் பொங்கல் விழா கோலாகலம்
/
மலை ரயில் பணிமனையில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 11, 2024 09:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் மலை ரயில் பணிமனையில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குன்னுார்- ஊட்டி மற்றும் ஊட்டி-- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் இன்ஜின்கள் குன்னுார் பணிமனையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன வரும், 15ம் தேதி பொங்கல் பண்டிகையை வருவதையொட்டி, நேற்று பணிமனை ஊழியர்கள் பழமை வாய்ந்த இன்ஜின்கள் முன்பு கோலமிட்டு, மண் பானையில் பொங்கல் வைத்தனர்.
ஒரே வண்ண உடை அணிந்து விழாவில் பங்கேற்று பூஜை செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை ஊழியர்கள் ஒருங்கிணைந்து பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.

