/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
/
கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
ADDED : பிப் 01, 2024 10:56 PM
ஊட்டி;'கோழிகளை நோயில் இருந்து பாதுகாக்க, தடுப்பூசி போடவேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம், அனைத்து கிராமங்களிலும், நேற்று முதல், 14ம் தேதி வரை, இரண்டு வாரம் கோழி கழிச்சல் நோய் தடுப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
மூன்று மாத கோழி குஞ்சுகள் முதல், அனைத்து பருவ கோழிகளுக்கும் குறைந்தபட்சம், 3 மாதங்களுக்கு ஒருமுறையும், அதிகப்பட்சமாக, 6 மாதத்திற்குள்ளும் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தவேண்டும்.
இல்லை எனில், 'ராணிக்கெட்' வைரஸ் தாக்கி, வெள்ளை கழிச்சல் நோயால், கோழிகள் பாதிக்கப்படும். எனவே, கோழி வளர்ப்போர் அனைவரும் கால்நடைத்துறை மூலமாக நடைபெறும் இம்முகாமில் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

