ADDED : ஜன 27, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் வசம்பள்ளம் பகுதியில் உபதலை ஊராட்சியின் கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தலைவர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள், ஆண்டு வரவு செலவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தங்களது பகுதிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கை மனுவை பொதுமக்கள் வழங்கினர். பொறியாளர் ஜெயந்தி உட்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

