/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குவாண்டம் அறிவியல் கருத்தரங்கு; அரிய தகவல்கள் பரிமாற்றம்
/
குவாண்டம் அறிவியல் கருத்தரங்கு; அரிய தகவல்கள் பரிமாற்றம்
குவாண்டம் அறிவியல் கருத்தரங்கு; அரிய தகவல்கள் பரிமாற்றம்
குவாண்டம் அறிவியல் கருத்தரங்கு; அரிய தகவல்கள் பரிமாற்றம்
ADDED : செப் 01, 2025 10:10 PM
கோத்தகிரி; கோத்தகிரி குண்டாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அறிவியல் கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை மீனா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:
நடப்பாண்டு குவாண்டம் அறிவியல் இயக்கத்தின் நுாறாவது ஆண்டாக அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் பல கருத்தரங்குகள் நடந்து வருகின்றன. கடந்த, 1925ல் உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குவாண்டம் அறிவியல் குறித்து கட்டுரை எழுதியுள்ளார். நடப்பாண்டுடன் நுாறு ஆண்டுகள் நிறைவு பெற உள்ள அந்த குவாண்டம் அறிவியல், பல மைல் கல்களை கடந்து வந்துள்ளது.
ஏராளமான தகவல்கள் தற்போது, பரவலாக பேசப்படும் 'ஏஐ' என்ற 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' தொழில்நுட்பம், பொதுமக்களை பொறுத்தவரை நவீனமானது. ஆனால், அறிவியல் வல்லுனர்களை பொறுத்தவரை அது பழசு. இன்றைய நவீன தொழில்நுட்பம் என்பது, 'ஏஜிஐ' எனப்படும் 'ஆர்டிபிசியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ்' என்பதாகும்.
ஏஐ., என்பது, ஏராளமான தகவல்களை நோக்கி வந்துள்ள ஒரு தொழில்நுட்பம். ஆனால், ஏஜிஐ., என்பது, மனிதர்களால் எவ்வளவு சிந்திக்க முடியுமோ அதற்கு இணையாக சிந்தித்து செயல்படும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம், கூடிய விரைவில் காலாவதியாக போகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்த தொழில்நுட்பம், ஏஎஸ்ஐ., எனப்படும் ஆர்டிபிசியல் சூப்பர் இண்டெலிஜென்ஸ் என்று கூறுகின்றனர். இந்த தொழில்நுட்பத்தில் மனித மூளையால் சிந்திக்க முடியாததை கூட, சிந்தித்து செயல்படுத்தப்படும் ஆற்றல் கொண்ட தொழில்நுட்பம் வரும் என கூறப்படுகிறது.
வேலை வாய்ப்புகள் உருவாகும் இந்த தொழில்நுட்பத்தால், ஐ.டி., ஊழியர்கள் வேலை இழப்பது உறுதி எனவும், எவ்வளவு வேலை வாய்ப்புகள் இழக்கப்படுமோ, அதேபோல இரு மடங்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குவாண்டம் அறிவியல், பிரபஞ்சத்தில் செயல்படும் அனைத்து இயக்கங்களையும் உள்ளடக்கியதாகும்.
இன்றைய கம்ப்யூட்டர்கள் பல நுாறு ஆண்டுகளில் செய்து முடிக்கும் ஒரு வேலையை, குவாண்டம் கம்ப்யூட்டர்கள், சில நிமிடங்களில் செய்து முடிக்கும்.
நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் குறித்து, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்து போதிய பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களும் பாடத்திட்டத்தில் உள்ள தகவல்களை விட, அதிகளவில் அறிவை தேட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.