/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட கலெக்டருக்கு ராமர் கோவில் அட்சதை
/
மாவட்ட கலெக்டருக்கு ராமர் கோவில் அட்சதை
ADDED : ஜன 16, 2024 11:20 PM
ஊட்டி;நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ராமர் கோவில் அட்சதையை மத்திய இணை அமைச்சர் முருகன் வழங்கினார்.
உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டது. இம்மாதம், 22 ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது. அயோத்தி ராமர் கோவிலில் பூஜிக்கப்பட்ட அட்சதை மற்றும் கோவில் படம், கும்பாபிேஷகம் அழைப்பிதழ் ஆகியவற்றை பா.ஜ., கட்சியினர் வீடு, வீடாக சென்று வினியோகித்தனர். மாவட்டத்தில், 2 லட்சம் குடும்பங்களுக்கு ராமர் கோவில் அட்சதை வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று முன்தினம் கூடலுாரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, தமிழக விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு அமைச்சரை சந்திக்க, கலெக்டர் அருணா அங்கு வந்தார். அப்போது, இணை அமைச்சர் முருகன், ராமர் கோவில் அட்சதையை கலெக்டரிடம் வழங்கினார்.

