/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராமர் பஜனை ஊர்வலம்; கம்பம் விளக்கை ஏந்தி ஊர்வலம்
/
ராமர் பஜனை ஊர்வலம்; கம்பம் விளக்கை ஏந்தி ஊர்வலம்
ADDED : ஜன 16, 2024 10:51 PM

கூடலுார்;கூடலுாரில் பொங்கல் விழாவை முன்னிட்டு ராமர் பஜனை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.
கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அரசு தேயிலை தோட்டங்கள், கிராம பகுதிகளில் உள்ள கோவில்களில் மார்கழி, 1ம் தேதி ராமர் பஜனை ஊர்வலம் துவங்கியது.
பக்தர், இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து நாள்தோறும் அதிகாலை ராமர் விளக்கு ஏற்றி (கம்பம்; விளக்கு) தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு எடுத்து சென்று பூஜை பெற்று சூரிய உதயத்துக்கு முன் கோவிலுக்குள் வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
மார்கழி மாதம் முடிந்து, தை, 1ம் தேதியான பொங்கல் விழாவை முன்னிட்டு இதன் நிறைவு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் கம்பம் விளக்கை ஏந்தி செல்ல, அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பக்தர்கள் பகவான் ராமரை ஊர்வலமாக ஒவ்வொரு வீடுகளாக எடுத்து சென்று பூஜை பெற்றனர். ஊர்வலம் மீண்டும் கோவிலை வந்து விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

