/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெத்தளா கிராமத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் துவக்கம்
/
பெத்தளா கிராமத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் துவக்கம்
பெத்தளா கிராமத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் துவக்கம்
பெத்தளா கிராமத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 03, 2025 08:12 PM
கோத்தகிரி; கோத்தகிரி பெத்தளா கிராமத்தில், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் முதலமைச்சரின் உத்தரவுப்படி, ஜூலை, 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை, 'வீடு தேடி ரேஷன் பொருட்கள்' என்ற திட்டம், சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, கடலுார், தர்மபுரி, நாகப்பட்டினம் மற்றும் நீலகிரி ஆகிய, 10 மாவட்டங்களில் சோதனை ரீதியாக துவக்கப்பட்டது.
மூத்த குடிமக்கள், நடக்க இயலாத அளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சார்பாக, வேறு நபரை அனுப்பி பொருட்களை வாங்கலாம். அதற்காக, பிறரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தினை நீக்கும் பொருட்டு, அவர்களது வீடுகளுக்கே அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் திட்டம் சோதனை அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் துவக்கப்பட்டது. முதற்கட்டமாக, கோத்தகிரி பெத்தளா பகுதிநேர ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியில், நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, ரேஷன் கடை பணியாளர்கள், குடும்பஅட்டைதாரர்கள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினர்.