/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கையை பறைசாற்றும் புடைப்பு சிற்பங்கள்; நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையத்தில் வசீகரம்
/
இயற்கையை பறைசாற்றும் புடைப்பு சிற்பங்கள்; நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையத்தில் வசீகரம்
இயற்கையை பறைசாற்றும் புடைப்பு சிற்பங்கள்; நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையத்தில் வசீகரம்
இயற்கையை பறைசாற்றும் புடைப்பு சிற்பங்கள்; நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையத்தில் வசீகரம்
ADDED : செப் 01, 2025 10:06 PM

குன்னுார்;குன்னுார் மலை ரயில் நிலைய வளாகத்திற்குள், நீலகிரியின் வனவிலங்குகள் மற்றும் இயற்கையை வெளிப்படுத்தும் விதமாக காணப்படும் புடைப்பு சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
கடந்த, 1854ல், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, ஆங்கிலேயர்களால் மலைரயில் பாதை அமைக்கப்பட்டு, 1899ல், போக்குவரத்து துவங்கியது. அதில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த குன்னுார் ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய், மதிப்பில், பழமை மாறாமல் புதுப்பித்து பொலிவுபடுத்தும் பணிகள், 2023ல் இருந்து நடந்து வருகிறது.
ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட, 'கோல்டன் சைப்ரஸ், பாக்ஸ்டைல், பிகஸ், பிகஸ் பிளாக், போகன்வில்லா போன்ற குட்டை ரக மரங்கள் மற்றும் 'மெக்சிகன் டுவிஸ்ட், ஐவி, பால்சம், டேபிள் ரோஸ்,'உட்பட, 30 வகையில் ஆயிரக்கணக்கான செடிகள், சதுப்புநிலங்களை பாதுகாக்கும் புல் வகைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
உயிர்ச்சூழல் மண்டலம் குறித்த ஓவியம் நீலகிரியின் இயற்கை காட்சிகள்; விலங்குகள், மலை ரயில் முக்கியத்துவத்தை பெருமையை சேர்க்கும் வகையிலான ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளை கவர தடுப்புச் சுவரில், 'முரல் ஆர்ட்' எனப்படும் நீலகிரியின் முக்கியத்துவத்தை பெருமையை சேர்க்கும் வகையில் புடைப்பு சிற்பம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதை தவிர, ரயில்வே அலுவலக சுவர்களில், மயில், யானை, காட்டெருமை, வரையாடு, புலி, கருஞ்சிறுத்தை, முள்ளம்பன்றி, சிறுத்தை, கரடி ஆகிய சிமென்ட் வடிவமைப்பு ஏற்படுத்தி, அதில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. மரங்களில், இருவாச்சி பறவை, மலபார் ஸ்குரில் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது.
'கோவை ஆர்ட் வெனசா ஆர்ட் கேலரி சார்பில், கலைஞர்கள், சம்பத், சரவணன் மற்றும் நாகமணி, நந்தகுமார் ஆகியோர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர் சம்பத் கூறுகையில், ''கோவை உட்பட பல்வேறு இடங்களில், கிட்ஸ் பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகளில் கடந்த, 15 ஆண்டுகளாக, நவீன புடைப்பு சிற்பம் வடிவமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசின், குன்னுார் ரயில் நிலையங்களில் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப்படுகிறது.
இது சுற்றுலா பயணிகள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,'' என்றார்.