/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியரசு தின விழா கொண்டாட்டம்: பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
குடியரசு தின விழா கொண்டாட்டம்: பள்ளி மாணவர்கள் அசத்தல்
குடியரசு தின விழா கொண்டாட்டம்: பள்ளி மாணவர்கள் அசத்தல்
குடியரசு தின விழா கொண்டாட்டம்: பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 26, 2024 11:06 PM

மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னுார், சூலுார் வட்டாரங்களில், குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், தாசில்தார் சந்திரன் தேசியக்கொடி ஏற்றினார். தலைமையிட துணை தாசில்தார் மகாராஜன் வரவேற்றார். நலிந்தோர் நலத்திட்ட தனி தாசில்தார் ரங்கராஜன், தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், சிவசக்தி கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் பேசினர். காரமடை வருவாய் ஆய்வாளர் ரேணுகா தேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மண்டல துணை தாசில்தார் செல்வராஜ் நன்றி கூறினார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் அமுதா தலைமை வகித்து, தேசியக் கொடி ஏற்றினார். பொறியாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் இனிப்பு வழங்கினார். துணைத் தலைவர் அருள் வடிவு, நகரமைப்பு அலுவலர் ஜெயவேலு, ஆய்வாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகராஜன், அலுவலகப் பணியாளர்கள் ஜெயராமன், கவுதம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மின் உதவியாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
பெ.நா.பாளையம்,
பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குடியரசு தின விழா, பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன், கல்வியாளர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. மாணவர்கள் கவிதை வாசித்தல், குடியரசு தின சிறப்பு பற்றிய பேச்சு, பாடல் பாடினர். கணித ஆசிரியர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
தம்பு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பள்ளியின் செயலாளர் ப்ரீத்தா பிரியதர்ஷினி தேசியக்கொடி ஏற்றினார். பள்ளியின் முன்னாள் மாணவர் ஜெயசீலன் முருகையன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அணிவகுப்பு மரியாதை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி, உஷாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் காங்., சார்பாக, தடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விழா நடந்தது. சர்க்கிள் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தேசியக்கொடி ஏற்றினார். தொகுதி இளைஞர் காங்., தலைவர் சூரிய பிரகாஷ், நகர இளைஞர் காங்., தலைவர் மணிகண்டன், துணைத் தலைவர் ஜெகதீஸ்வரன், சர்க்கிள் பொதுச்செயலாளர் ஜெகதீஷ், டிவிசன் தலைவர்கள் சசிகுமார், வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்., கமிட்டி சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையம், நேரு காலனி, ஜங்கம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம், வடமதுரை, பன்னீர் மடை, கணுவாய் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. வட்டார காங்., கமிட்டி தலைவர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், நகர காங்., கமிட்டி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன், பெரியநாயக்கன்பாளையம் நகர தலைவர் ராமராஜ், குருடம்பாளையம் நகர தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
துடியலுார் வட்டார வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில், துடியலுார் காமராஜர் தினசரி மார்க்கெட் பகுதியில் விழா கொண்டாடப்பட்டது. சங்க செயலாளர் தங்கசாமி, பொருளாளர் அருள் பெருமாள், துணை செயலாளர்கள் சிவக்குமார், பரமசிவம், பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையத்தில், கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜோதிபுரம் அருகே, சாரங்க நகர் இளைஞர் பொதுப்பணி குழு சார்பில், பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வீரபாண்டி பிரிவு சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நாயர் வித்யா மந்திர் பள்ளி சார்பில், சி.ஆர்.பி.எப்., ஆய்வாளர் கந்தசாமி, தேசியக் கொடியேற்றினார். பள்ளி நிர்வாகி மதன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
குடியரசு தின விழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் பள்ளி மாணவர்கள், கவுண்டம்பாளையம், சாமி செட்டிபாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் காய்கறி சந்தை அமைத்து, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும், பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு துணி பைகளை இலவசமாகவும் வழங்கினர். பள்ளி தாளாளர் சத்யா அறிவரசு, முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சூலுார்
சூலுார் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் நித்திலவல்லி தேசியக்கொடி ஏற்றினார். மண்டல துணை தாசில்தார் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில், டி.எஸ்.பி., தங்கராமன் தேசியக்கொடி ஏற்றினார். சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மாதையன், தேசியக்கொடியேற்றினார். சூலுார் பேரூராட்சி அலுவலகத்தில், சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆர்.வி.எஸ்., கலை, அறிவியல் கல்லுாரியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி கல்பனா கோபாலன் தேசியக்கொடி ஏற்றினார். கேப்டன் தீபக் ரிஷாந்த் தலைமையில், என்.சி.சி., மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.
கே.பி.ஆர்., கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில், அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் தேசியக்கொடி ஏற்றினார். குழும தலைவர் ராமசாமி, முதல்வர் கீதா, பேராசிரியர் ஒர்லோவா ரஷ்யா ஆகியோர் பங்கேற்றனர்.
சூலுார் கே.வி., பள்ளியில், 43 விங் ஏர் கமாண்டிங் அதிகாரி விவர்த் சிங் தேசியக்கொடி ஏற்றினார். முதல்வர் ராகேஷ் மிஸ்ரா, தலைமை ஆசிரியை ராதா வெங்கடேஷன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அன்னுார்
சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் நேரு, தேசியக்கொடி ஏற்றினார். பி.டி.ஏ., செயலாளர் ராஜேந்திரன் இனிப்பு வழங்கினார்.
மக்கள் சமூக நல ஆர்வலர் அறக்கட்டளை சார்பில், சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக பள்ளிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். அறக்கட்டளை தலைவர் சரவணன், செயலாளர் சாந்தமூர்த்தி, பொருளாளர் வாசுகி, துணைத்தலைவர் விமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். தனியார் மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியை ஸ்ரீநிதி பேசினார்.
சொக்கம்பாளையம் தேசிய வித்யாசாலை துவக்க பள்ளியில், தலைமையாசிரியர் முருகன் தேசியக் கொடி ஏற்றினார். உதவி தலைமை ஆசிரியை சாந்தி இனிப்பு வழங்கினார். மாணவர்கள், மகாத்மா காந்தி திருவுருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று, சுதந்திர போராட்ட தியாகி பெட்டையன் சிலை மற்றும் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அன்னுார் - அவிநாசி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளியில், பள்ளி தாளாளர் பிரேம் தேவா தேசியக்கொடி ஏற்றினார். ஆசிரியை ரோசலின் இனிப்பு வழங்கினார். கிறிஸ்துவ தேவாலய ஆயர் சுவிசேஷரத்தினம் பேசினார்.
கீரணத்தம் ஊராட்சியில், குறிஞ்சி நகர் பூங்காவில், எஸ்.கே.எம். வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் தேசியக் கொடியேற்றப்பட்டது. ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பூங்கா பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
சங்கத் தலைவர் மணிவாசகம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
----நிருபர் குழு-.

