ADDED : பிப் 29, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:அரசூர் ஊராட்சியில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே, நில மட்ட குடிநீர் தொட்டிக்கு, பில்லுார் குடிநீர் வரும் பிரதான குழாயில் இருந்து பொது பைப் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சில வாரங்களாக, பைப்பில் குறைவான அளவே தண்ணீர் வருவதாக புகார் எழுந்துள்ளது.
அரசூர் மக்கள் கூறுகையில், 'சில வாரங்களாக தண்ணீர் மிகவும் குறைவாக வருகிறது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து குழாயை சரிசெய்ய வேண்டும்,'' என்றனர்.

