/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பொருட்கள் விற்பனை ரூ. 25 ஆயிரம் அபராதம்
/
போதை பொருட்கள் விற்பனை ரூ. 25 ஆயிரம் அபராதம்
ADDED : ஜன 26, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி:கோத்தகிரி-- மேட்டுப்பாளையம் சாலையில், சேட்டுப்பேட்டை மற்றும் மாமரம் பகுதியில் உள்ள பெட்டிகளில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையிலான அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, இரு கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், கடை உரிமையாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், மற்றொரு கடைக்கு 'சீல்' வைத்து எச்சரித்தனர்.

