/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அத்திக்குன்னா பகுதியில் யானையால் பள்ளி சுவர் சேதம்
/
அத்திக்குன்னா பகுதியில் யானையால் பள்ளி சுவர் சேதம்
அத்திக்குன்னா பகுதியில் யானையால் பள்ளி சுவர் சேதம்
அத்திக்குன்னா பகுதியில் யானையால் பள்ளி சுவர் சேதம்
ADDED : ஜூன் 23, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்: பந்தலுார் அருகே அத்திக்குன்னா பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை வந்துள்ளது. தேயிலை தோட்ட மற்றும் குடியிருப்புகள் வழியாக வந்த யானை, சாலை ஓரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாக பாதுகாப்பு சுவரை இடித்துள்ளது.
அதில், சுவர் விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதன் அருகே குடியிருப்புகள் உள்ள நிலையில், மக்கள் அச்சம் அடைந்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டதுடன், குடியிருப்புகள் அருகே முகாமிட்டிருந்த யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.