/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்
/
அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 27, 2024 03:13 AM
கோத்தகிரி: கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளியில் இரண்டு நாள் பல்துறை அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி தாளாளர் தன்ராஜ் தலைமை வகித்தார். கண்காட்சியில், மாணவர்கள் தயாரித்த, ட்ரோன்கள், தானியங்கி கார்களின் மாதிரிகள், அன்றாட வாழ்வுக்கு தேவையான நுண் உணர் கருவிகள் சூரிய மின்சக்தி, ஹைட்ராலிக் தொழில்நுட்ப கருவிகள் உட்பட பல்வேறு கருவிகள் வைக்கப்பட்டு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தவிர, அறிவியல் வேதிப்பொருட்களின் வேதிமாற்றம், பண்டைய மற்றும் நவீன இந்தியாவின் கட்டட கலைகளின் மாதிரிகள், விண்வெளியில் உள்ள கோள்களின் இயக்கங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.
அதில், பள்ளி முதல்வர் சரோ தன்ராஜ், இயக்குனர் சம்ஜித்,இணை முதல்வர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

