/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழ் சங்கம் பொங்கல் விழா; மாணவர்கள் நடனத்தில் அசத்தல்
/
தமிழ் சங்கம் பொங்கல் விழா; மாணவர்கள் நடனத்தில் அசத்தல்
தமிழ் சங்கம் பொங்கல் விழா; மாணவர்கள் நடனத்தில் அசத்தல்
தமிழ் சங்கம் பொங்கல் விழா; மாணவர்கள் நடனத்தில் அசத்தல்
ADDED : ஜன 16, 2024 10:48 PM

கூடலுார்;கூடலுார், பழைய பஸ் ஸ்டாண்ட் காந்தி திடலில், நீலகிரி மாவட்ட தமிழ் சங்கத்தின் 23ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது.
செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் வரவேற்றார்.சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.
குமரேசன் துவக்கி வைத்தார். ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம், ரெப்கோ வீட்டு கடன் நிறுவன  தலைவர் தங்கராஜ் பங்கேற்று பொங்கல் விழா குறித்து பேசினர்.
தொடர்ந்து கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  மாணவர்களின் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளும், பறை இசை நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், செயலாளர் நாகநாதன், மாவட்ட வக்கீல் சங்க தலைவர் சந்திரபோஸ், துணை தலைவர் ஆனந்தராஜா,  துணை செயலாளர் கணேசன், பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை செயலாளர் கலை செல்வன் நன்றி கூறினார்.