/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடைபாதையான தாவரவியல் பூங்கா நடைபாதை
/
தடைபாதையான தாவரவியல் பூங்கா நடைபாதை
ADDED : பிப் 05, 2024 09:40 PM

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோர நடைபாதையில் உள்ள கடைகளால்,
சுற்றுலா பயணிகள் சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா அழகை ரசிக்க ஆண்டுதோறும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வார விடுமுறை நாட்களில் கூட, 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தாவரவியல் பூங்கா சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.
இச்சாலையோர நடைபாதையில் பலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், நடை பாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
நடைபாதை வியாபாரிகளுக்காக, பூங்கா அருகே, 50 கடைகள் கட்டி முடிக்கப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.
ஆனால், கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. அந்த கடைகளை விரைவில் திறந்து, அங்குள்ள தற்காலிக கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு கொடுக்கும் பட்சத்தில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து, நடைபாதையில் பயணிகள் நடந்து செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.