/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைக்கில் வந்தவரை துரத்திய யானை ; புதரில் விழுந்ததால் உயிர் தப்பினார்

ADDED : ஜன 16, 2024 10:52 PM
பந்தலுார்;பந்தலுார் அருகே பைக்கில் வந்தவரை யானை துரத்தியபோது, புதரில் விழுந்ததால் உயிர் தப்பினார்.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்பவர் கிருஷ்ணமூர்த்தி, 51. இவர் நேற்று முன்தினம் மாலை சேரம்பாடியில் இருந்து, பந்தலுார் நோக்கி தனது மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மண்டசாமி கோவில் அருகே சேரன் நகர் என்ற இடத்தில், யானை ஒன்று குட்டியுடன் சாலை ஓரத்தில் நடந்து வந்துள்ளது. யானையை பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் பைக்கில் இருந்து குதித்து தப்பி ஓடி உள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி பைக்கை நிறுத்திவிட்டு யானையிடம் இருந்து தப்பி ஓடி, சாலையோர மூங்கில் புதரில் உருண்டு உள்ளார். இதனை பார்த்த யானை திரும்பி சென்றுள்ளது.
தகவல் அறிந்த வனக்குழுவினர் சம்பவத்திற்கு சென்று யானையை அங்கிருந்து துரத்தி, கிருஷ்ணமூர்த்தியை பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனக்குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.