/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துப்பாக்கியால் சுட்டதில் காட்டெருமை பலி கொன்றது யார் என வனத்துறை விசாரணை

ADDED : ஜன 27, 2024 02:30 AM

கூடலுார்:நீலகிரி மாவட்டம் ஓவேலி பெரிய சூண்டி பகுதியில் காட்டெருமை ஒன்று நடக்க முடியாமல் சிரமப்படுவது குறித்து ஜன.22ம் தேதி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கடந்த 24ம் தேதி காட்டெருமையை கண்ட போது அது தனியார் காபி எஸ்டேட் பகுதிக்குள் சென்று மறைந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை காட்டெருமையை தேடிய போது தனியார் காபி தோட்டத்தில் இறந்து கிடந்தது. வன ஊழியர்கள் அதன் உடலை ஆய்வு செய்த போது இரண்டு இடங்களில் துப்பாக்கியில் சுடப்பட்டதும் அதனால் ஏற்பட்ட பாதிப்பால் காட்டெருமை உயிரிழந்ததும் தெரிந்தது.
வனத்துறையினர் கூறியதாவது:
இறந்த ஆண் காட்டெருமைக்கு 10 வயது இருக்கும். சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் அந்த விலங்கை துப்பாக்கியால் சுட்டதில் வயிற்று பகுதியில் பட்ட குண்டு வெளியேறி உள்ளது.
கொம்பு அருகே சுட்ட துப்பாக்கி குண்டு அங்கேயே இருந்ததால் அந்த விலங்கு சில நாட்களாக நடக்க சிரமப்பட்டு நேற்று முன்தினம் இறந்தது. விசாரணை மேற்கொண்டுள்ளோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு கூறினர்.