ADDED : பிப் 05, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், டி.பி.டி., நட்சத்திர கல்லுாரி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்குபெறும் தேசிய கருத்தரங்கு, நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்திய உயிர் தொழில்நுட்பவியல் துறை விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர்.
கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களான விஞ்ஞானிகள் கரீமா குப்தா, மிஸ்ரா ஆகியோர் தலைமையில் நடக்கும் இக்கருத்தரங்கில், 15க்கும் மேற்பட்ட துறை வல்லுனர்கள், 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து முதல்வர்கள், அறிவியல் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
கல்லுாரி மேலாண் அறங்காவலர் செந்தில் கணேஷ் கருத்தரங்கை துவக்கி வைக்க உள்ளார். தாளாளர் வித்யாலட்சுமி, செயலர் சாரம்மா, முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.