/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எப்பநாடு பீரமுக்கு கோவில் திருவிழா கோலாகலம்
/
எப்பநாடு பீரமுக்கு கோவில் திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 09, 2024 10:15 PM
ஊட்டி:ஊட்டி அருகே, எப்பநாடு பீரமுக்கு கோவிலில் ஆண்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஊட்டி அருகே எப்பநாடு கிராமத்தில், நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆண்டு தோறும் கிராம மக்கள் சார்பில் அங்குள்ள பீரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் நடக்கும் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நடப்பாண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில், காலை, 10:30 மணிக்கு ஊர் தலைவர் அப்பாஜி தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமியை மேள, தாளம் முழங்க பஜனையுடன் ஊர்வலமாக பீரமுக்கு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், கிராம மக்கள் திரளாக பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பாரம்பரிய உடை அணிந்து கோவில் முன் நடனமாடி மகிழ்ந்தனர்.

