/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 10, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 2 நாட்களாக கனமழை பெய்தது.
நேற்று முன்தினம் இரவு குன்னுார் மேட்டுப்பாளையம் சாலையில், லெவல் கிராசிங் அருகே மரம் விழுந்தது. தகவலின் தீயணைப்புத் துறையினர் சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'இரவிலும் மழை பெய்து வருவதால், மலை பாதையில் பயணிப்பவர்கள் மிகவும் கவனத்துடன் வாகத்தை இயக்க வேண்டும்,' என்றனர்.

