/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகள் கேட்ட கிராம மக்கள்
/
அடிப்படை வசதிகள் கேட்ட கிராம மக்கள்
ADDED : ஜன 27, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார், ஸ்ரீமதுரை ஊராட்சி கிராம சபை கூட்டம் குங்கூர்மூலா அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, ஊராட்சி தலைவர் சுனில் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலாளர் சோனிஷாஜி தீர்மானங்களை வகித்தார். பொதுமக்கள், தங்கள் பகுதி சாலை, குடிநீர், தெருவிளக்கு பிரச்னைகள் குறித்து பேசினர். தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் ரெஜிமேத்யூ, கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

