/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஈர நிலங்கள் பல்லுயிர் பெருக்கத்தின் ஆதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
/
ஈர நிலங்கள் பல்லுயிர் பெருக்கத்தின் ஆதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
ஈர நிலங்கள் பல்லுயிர் பெருக்கத்தின் ஆதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
ஈர நிலங்கள் பல்லுயிர் பெருக்கத்தின் ஆதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
ADDED : ஜன 26, 2024 12:44 AM

ஊட்டி;ஊட்டியில், தேசிய பசுமை படை சார்பில், ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மத்திய சுற்றுச்சூழல் துறை ; தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின், 'ஈரநிலம் மனிதனின் வளமையான வாழ்விற்கு ஆதாரம்,' என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடந்தது.
மாவட்டத்தில் ஈரநிலங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்ட நிலையில், இருக்கும் ஈர நிலங்கள் பாதுகாப்பதன் முக்கியத்துவம்; இந்து நகர் உயர்நிலைப்பள்ளி அருகே காணப்படும் ஈர நிலப்பகுதி மற்றும் மரபியல் பூங்காக்களை பாதுகாப்பதின் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழச்சியில், பிரீக்ஸ் பள்ளி தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் சிந்தாமணி பேசுகையில், ''உலக அளவில் ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் பல்லாயிரம் வலசை பறவைகள், மூலிகை செடிகள், நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், அரியவகை மூலிகைகள், வல்லாரை மற்றும் வசம்பு போன்றவை ஈர நிலங்களை சார்ந்து உள்ளது,'' என்றார்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில்,''மண்வளம், நிலத்தடி நீர் சேமிப்பு, தாவரங்கள் விலங்குகள், பூச்சியினங்கள் எண்ணற்ற ஜீவ ராசிகளின் பல்லுயிர் பெருக்கத்தின் ஆதாரமாக ஈர நிலம் உள்ளது. கையளவு உள்ள நிலங்களும் எதிர்காலத்தில் நீராதாரத்திற்கு அவசியமாக உள்ளது.
அதனை பாதுகாப்பது எதிர்கால சந்ததியினரின் வளமையான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் பெறுகிறது,''என்றார்.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசுகையில், ''நீலகிரியில் ஈர நிலங்கள் அழிவுக்கு முக்கிய காரணம், அடிப்படை அறிவு இல்லாததாகும். வளரும் தலைமுறை இயற்கையின் அறிவினை பெறுவது கட்டாயமாக்க வேண்டியது அவசியம்,'' என்றார். அதில், 8ம் வகுப்பு மாணவியர் தாரணி மற்றும் சம்யுக்தா ஆகியோர், 'ஊட்டி மரவியல் பூங்காவில் உள்ள ஈர நிலப்பகுதியில் காண்பபடும் கற்பூர மரங்கள் அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்,' என, உறுதியளித்தனர்.
நிகழ்ச்சியில், பிரீக்ஸ் மற்றும் எஸ்.ஆர்.வி.எஸ்., பள்ளி மாணவர்கள், சூழல் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை செய்திருந்தது.

