/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏழு வாரமாக சம்பளம் வழங்கவில்லை; தொழிலாளர்கள் வேதனை
/
ஏழு வாரமாக சம்பளம் வழங்கவில்லை; தொழிலாளர்கள் வேதனை
ஏழு வாரமாக சம்பளம் வழங்கவில்லை; தொழிலாளர்கள் வேதனை
ஏழு வாரமாக சம்பளம் வழங்கவில்லை; தொழிலாளர்கள் வேதனை
ADDED : ஜன 09, 2024 10:46 PM
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஏழு வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், 100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளம், குட்டை தூர் வாருதல், சாலை அமைத்தல், மரக்கன்று நடுதல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல் ஆகிய பணிகள் செய்யப்படுகின்றன. தினசரி சம்பளமாக 294 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட வேலை செய்வோருக்கு வழங்கப்படுகிறது.
அன்னுார் ஒன்றியத்தில் சராசரியாக தினமும் 1,500 பேர் இந்த திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். பதிவு செய்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் செய்த பணிக்கு அடுத்த வாரம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏழு வாரங்களுக்கான சம்பளம் நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கூறுகையில்,' கடந்த எட்டு வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு வார சம்பளம் மட்டும் கடந்த வாரம் வழங்கப்பட்டது. இன்னும் ஏழு வார சம்பளம் நிலுவையில் உள்ளது.
இந்த சம்பளத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளது. இந்நிலையில் சம்பளம் இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். அரசு விரைவில் எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்,' என்றனர்.

