/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜான் சல்லிவன் நினைவு தினம் அனுசரிப்பு: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
/
ஜான் சல்லிவன் நினைவு தினம் அனுசரிப்பு: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஜான் சல்லிவன் நினைவு தினம் அனுசரிப்பு: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஜான் சல்லிவன் நினைவு தினம் அனுசரிப்பு: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ADDED : ஜன 16, 2024 11:12 PM

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லிவனின் நினைவு நாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஊட்டி நகரை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவன், ஜூன், 15ல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிறந்தவர். 1815 முதல், 1830ம் ஆண்டுவரை, கோவை மாவட்ட கலெக்டராக பணிப்புரிந்தார்.
அந்த கால கட்டத்தில், கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில், மாவட்டத்தின் முதல் கலெக்டர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு அமைத்து, மாவட்டத்தை நிர்வகித்து வந்தார். அவரது, நினைவாக, கன்னேரிமுக்கு பகுதியில் அமைந்துள்ள முதல் கலெக்டர் அலுவலகம், தற்போது, நீலகிரி ஆவண காப்பகமாக செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் மையப்பகுதியான ஊட்டியில், 1821ல் இரண்டாவதாக கலெக்டர் அலுவலகத்தை நிறுவினார். தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கிய வழித்தடங்கள், விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கிய சல்லிவனின் முயற்சியால், ஊட்டி ஏரி உருவாக்கப்பட்டது. அவர், 1855, ஜன., 16ல் மரணம் அடைந்தார்.
ஊட்டி நகரை, 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த சல்லிவனின் நினைவு கூறும் வகையில், ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அவருக்கு, மார்பளவு வெண்கல சிலை வைக்கப்பட்டு, 2022, மே, 21ல் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. அவரின் நினைவு நாளான நேற்று, கலெக்டர் அருணா முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சல்லிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட, பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அமைந்துள்ள சல்லிவன் நினைவிடத்தில், அவரது சிலைக்கு, தாசில்தார் கோமதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

