/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி, குன்னுாரில் யோகா தினம்: மரக்கன்று நடவு
/
ஊட்டி, குன்னுாரில் யோகா தினம்: மரக்கன்று நடவு
ADDED : ஜூன் 23, 2025 04:37 AM

குன்னூர்: குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் யோகா தினத்தையொட்டி பலர் யோகாசனம் செய்தனர்.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், 'யோகா மகாகும்பம்' என்ற தலைப்பில், ஒரே பூமி; ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' என்ற கருப்பொருளில், 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
வாரிய நுழைவாயில் பூங்காவில் நடந்த யோகாசன பயிற்சியில், வாரிய முதன்மை நிர்வாக இயக்குனர் வினித் பாபாசாகிப் லோட்டே முன்னிலையில், கன்டேன்மென்ட் வாரிய ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள், தன்னார்வ அமைப்பினர், பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் சர்வதேச யோகா தினம் வெலிங்டன் ஏரி பூங்காவில் நடந்தது. அதில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ராணுவ அதிகாரிகள், அக்னி வீரர்கள் பங்கேற்றனர்.
ஊட்டி அருகே குருகுலம் பள்ளியில் யோகா தினத்தை ஒட்டி மாணவ , மாணவிகள் யோகாவின் அடிப்படையான, சூரிய நமஸ்காரம் மற்றும் பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்தனர். குருகுலம் பள்ளியின் தாளாளர் அர்ஜுணன் தலைமை நிர்வாகி வாசுகி, முதல்வர் சுரேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் என். சி.எம்.எஸ்., திருமண மண்டபத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் தலைமையில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கூட்டுறவு சார் பதிவாளர்கள், துறை அலுவலர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.