/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'விளையாடி மகிழ்ந்தால் நன்றாக படிக்கலாம்'
/
'விளையாடி மகிழ்ந்தால் நன்றாக படிக்கலாம்'
ADDED : பிப் 06, 2024 12:05 AM
மேட்டுப்பாளையம்;காரமடை எக்ஸ்போனிக்ஸ் அகாடமி ஐ.சி.எஸ்.இ. பள்ளியில், சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்மஸ்ரீ பத்திரப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில், சைலேந்திர பாபு பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவு துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. வருங்காலத்தில் பல்வேறு துறைகளில் தானாக இயங்கும் இயந்திரங்களை தயாரிக்கும் துறையில் வேலை வாய்ப்பு அதிகம் இருக்கும். விளையாடினால் தான் மகிழ்ச்சி. விளையாடி மகிழ்ந்தால் நன்றாக படிக்கலாம்,'' என்றார்.
பள்ளி முதல்வர் மகேஸ்வரி ரங்கராஜ், நிறுவனர் செந்தில் ரங்கராஜ், நிர்வாக இயக்குனர் சிபி ஆதர்ஸ், இயக்குனர் பவன் ஆகாஷ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.