/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
லாரி - வேன் மோதல்; 18 முருக பக்தர்கள் காயம்
/
லாரி - வேன் மோதல்; 18 முருக பக்தர்கள் காயம்
ADDED : மே 27, 2025 05:02 AM
மங்கலமேடு; பெரம்பலுார் அருகே வேன் மீது குறுக்கே வந்த லாரி மோதி, முருக பக்தர்கள் 18 பேர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சாத்தனுாரைச் சேர்ந்த 20 பேர், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று காலை 4:00 மணிக்கு வேனில் புறப்பட்டனர். மேலுாரைச் சேர்ந்த சுரேஷ், 44, வேனை ஓட்டினார்.
சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுார் மாவட்டம், முருக்கன்குடி பிரிவு சாலையில் காலை 6:30 மணிக்கு, வேனும், குறுக்கே வந்த செங்கல் லோடு ஏற்றிய லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில், வேனின் முன்பகுதி சேதமடைந்து, சங்கீதா, 34; மாரியம்மாள், 50; செல்லமுத்து, 61; மதியழகன், 12, ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்து, திருச்சி தனியார் மருத்துவமனையிலும், 12 முதல் 61 வயது வரை உள்ள, 14 பேர் லேசான காயமடைந்து, பெரம்பலுார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.