/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
மழைக்கு ஒழுகும் வகுப்பறை பள்ளி மாணவர்கள் அவதி
/
மழைக்கு ஒழுகும் வகுப்பறை பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : டிச 02, 2025 04:25 AM

பெரம்பலுார்: பள்ளியின் ஒழுகும் வகுப்பறையில், பள்ளி மாணவர்கள் பாடம் கற்பதாக, மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், களரம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 32 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். மூன்று ஆசிரியர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இப்பள்ளியின், ஓடுகள் உடைந்து காணப்படுகின்றன. மழை காலங்களில் ஒழுகும் வகுப்பறையில் தான் மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மழை ஒழுகுவதை தடுக்க, ஓடுகளின் மீது டிஜிட்டல் பேனரை கட்டி வைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதில், ஆத்திரமடைந்த மக்கள், நேற்று உடைந்த ஓடுகளுடன், பெரம்பலுார் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

